தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN


2021-2022-ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், 

2021-2022-ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சென்னை மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை இளம் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, மருத்துவக்கல்வி, பி.இ, பிடெக்., பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் ஆயிரம் முதல் ரூபாய் 7000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஒன்பதாம் வகுப்புக்கு மேல் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் http://www.chennai.nic.in/ என்ற இணையதளத்தில், அரசுத்துறைகள், மாற்றுத்திறனாளிகள் நலன் என்ற பகுதியில் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் அல்லது கல்விநிலைய முதல்வர் அவர்களிடம் ஒப்புதல் பெற்று விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட சான்றுகளுடன் இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், டி.எம்.எஸ்.வளாகம், தேனாம்பேட்டை, சென்னை – 600006 என்ற முகவரியில் விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் 2021-2022ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின் மூலம் ஒன்பதாம் வகுப்புக்கு மேல் பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்வி பயில்பவர்களுக்கு ரூபாய் 7000 முதல் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு scholorship.gov.in என்ற இணையதளத்தின் மூலம்  நேரடியாக விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்படி விண்ணப்பங்கள் 15.11.2021க்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தத் தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT