தமிழ்நாடு

வாகனங்களின் வெளிப்புறத்தில் உள்ள தலைவர்களின் படங்களை நீக்க உத்தரவு

DIN

வாகனங்களில் வெளிப்புறத்தில் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தார். வழக்கறிஞர்கள் 50% வாகனங்களில் 'வழக்கறிஞர்' என ஸ்டிக்கர் ஒட்டி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் இதனால் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். 

இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் நீதிபதிகள், வாகனங்களில் புகைப்படங்கள் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் 60 நாள்களுக்குள் நீக்க வேண்டும். 

அதுபோன்று வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள், கட்சி தலைவர்களின் புகைப்படங்களை தேர்தல் நேரங்களில் மட்டுமே பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் வாகனங்களில் வெளிப்புறத்தில் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT