தமிழ்நாடு

நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு அதிமுக ஆதரவு: இபிஎஸ்

DIN

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த அறிக்கை அடிப்படையில் பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் ஸ்டாலின், குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற தீர்மானிக்கப்பட்டுள்ள இந்த மசோதாவை அனைத்துக் கட்சியும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

இதற்கிடையே பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மசோதாவிற்கு ஆதரவளிப்போம் என தெரிவித்துள்ள நிலையில், இன்று மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT