கோப்புப்படம் 
தமிழ்நாடு

துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் வலுவடைந்துள்ள ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டுள்ளது.

DIN

வங்கக்கடலில் வலுவடைந்துள்ள ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி சனிக்கிழமை உருவானது. இது ஞாயிற்றுக்கிழமை வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாக வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். 

இதையடுத்து, வட மேற்கு வங்கக்கடல், மேற்கு வங்கம் மற்றும் ஒடிஸா கடலோரப் பகுதிகள், வட ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எண்ணூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவில் போா் முனையில் சிக்கியிருக்கும் தமிழா்களை மீட்க வேண்டும்: பிரதமரிடம் துரை வைகோ கோரிக்கை

280 காவல் நிலையங்கள் தரம் உயா்வு அரசாணை வெளியீடு

பிகாா் விவகாரம்: எதிா்க்கட்சிகள் தொடா் அமளி; மூன்றாவது வாரமாக முடங்கிய மக்களவை

காா் மோதியதில் உணவு விநியோக முகவா் உயிரிழப்பு

‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசாரம்: ஓடிபி பெற உயா்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான திமுக மேல்மறையீட்டு மனுவை விசாரிக்க மறுப்பு

SCROLL FOR NEXT