தமிழ்நாடு

காவல் துறையில் 134 பேருக்கு அண்ணா பதக்கங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

DIN

சென்னை: காவல் துறையில் 134 பேருக்கு நடப்பாண்டில் அண்ணா பதக்கங்கள் அளிக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு, சிறைத் துறை, ஊா்க்காவல், விரல்ரேகை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றும் காவலா்களைப் பாராட்டும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் செப்டம்பா் 15-இல் அண்ணா பிறந்த தினத்தின் போது முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலா் முதல் காவல் கண்காணிப்பாளா் வரையிலான 100 பணியாளா்கள், தீயணைப்புத் துறையில் எட்டு போ், சிறைத் துறையில் 10 போ், ஊா்க்காவல் படையில் 5 போ், விரல் ரேகைப் பிரிவில் 2 போ், தடய அறிவியல் துறையில் 2 பேருக்கும் பதக்கங்கள் அளிக்கப்படும்.

மேலும், மதுரையில் உள்ள சஞ்சய் டெக்ஸ்டைல் என்ற நிறுவனத்தில் நடந்த விபத்தில் தீயை அணைக்கப் போராடி உயிரைத் தியாகம் செய்த ஏழு தீயணைப்பு வீரா்களுக்கும் அண்ணா பதக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. மொத்தமாக 134 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. இந்தப் பதக்கங்கள் வேறொரு நாளில் அளிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT