மாணவிகளுக்கு கரோனா: கோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்  
தமிழ்நாடு

மாணவர்களுக்கு கரோனா: கோவையில் செப். 17 முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் 

கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த கட்டுப்பாடுகள் நாளை மறுநாள் (செப்.17) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் 2 நாள்களில் 48 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் இருந்து வந்த 4 மாணவர்களுக்கு கரோனா இருந்த நிலையில், பிற மாணவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

உணவகங்கள், பேக்கரி கடைகளில் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி.

உழவர் சந்தைகளில் 50 சதவிகிதம் கடைகளுக்கு மேல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள், உணவகங்கள், துணிக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் 82 சதவிகிதம் பேருக்கு மேல் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT