அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பேட்டி 
தமிழ்நாடு

‘தேர்தலை மூன்று, நான்கு கட்டங்களாக சிதைத்தது அதிமுகதான்’: அமைச்சர் பெரியகருப்பன்

ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்ததை மூன்று, நான்கு கட்டங்களாக சிதைத்தது அதிமுக தான். இது பற்றி பேசுவதற்கு அதிமுகவுக்கு அருகதை கிடையாது என்று தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.

DIN

காரைக்குடி: ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்ததை மூன்று, நான்கு கட்டங்களாக சிதைத்தது அதிமுக தான். இது பற்றி பேசுவதற்கு அதிமுகவுக்கு அருகதை கிடையாது என்று தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சரிடம் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், திமுக தலைமையில் நாடளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் இருந்த  கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என முதல்வர் கூறியுள்ளார்.

 மேலும்  பெரியாரின் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் இந்த அரசு உறுது ணையாக இருக்கும்அண்ணா, பெரியார், கலைஞர் இணைந்த கலவையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது நடைமுறையில் சாத்தியம் தான். ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடந்ததை மூன்று ,நான்கு கட்டங்களாக சிதைத்தது அதிமுகதான்இதைப்பற்றி பேச அதிமுகவுக்கு அருகதை கிடையாது என்றார்.

அமைச்சருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.  திருமாவளவன் எம்.பி, காரைக்குடி சட்டபேரவை உறுப்பினர் எஸ். மாங்குடி (காங்.,)  ஆகியோரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

தடக் 2: அமோக வரவேற்பில் ஹிந்தி பரியேறும் பெருமாள்!

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

SCROLL FOR NEXT