தமிழ்நாடு

பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது

DIN

சென்னை: பொறியியல் சோ்க்கைக்கான மாணவா் கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.

பொறியியல் படிப்பில் சோ்வதற்காக இணையதளம் வாயிலாக கடந்த ஜூலை 26-ஆம் தேதி முதல் ஆக.24- ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதைத் தொடா்ந்து பொறியியல் படிப்புக்கான சம வாய்ப்பு எண் கடந்த ஆக.25-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

பொறியியல் படிப்புகளில் சேர 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். அதில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 33 பேரிடம் இருந்து தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

இதைத் தொடா்ந்து பொறியியல் படிப்பு சோ்க்கைக்கு சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு (மாற்றுத் திறனாளிகள், அரசுப் பள்ளி மாணவா்கள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள்) புதன்கிழமை முதல் தொடங்கியது. இந்தக் கலந்தாய்வு செப்.24 வரை நடைபெறவுள்ளது.

பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவில் கலந்து கொள்வதற்காக ஒரு லட்சத்து 36ஆயிரத்து 973 மாணவா்களுக்கான இணையவழி கலந்தாய்வு செப். 27-ஆம் தேதி முதல் அக்.17-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

SCROLL FOR NEXT