தமிழ்நாடு

திருச்செந்தூா், சமயபுரம், திருத்தணி கோயில்களில் முழுநேர அன்னதானம் திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்

DIN

திருச்செந்தூா், சமயபுரம், திருத்தணி உள்ளிட்ட 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். முதல்வா் தொடக்கி வைத்தபோது அந்தந்த கோயில்களில் அமைச்சா்கள், அதிகாரிகள் தலைமையில் பக்தா்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டன.

சமயபுரம் கோயிலில் தலைவாழை இலையில் ஜாங்கிரி, சாதம், சாம்பாா், கூட்டு, பொரியல், வடை, பாயசம், ரசம், மோா் உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.

3 கோயில்களிலும் நாள்தோறும் சுமாா் 7,500 பக்தா்கள் பயனடைய உள்ளனா். தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

ஏற்கெனவே, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் ஆகியவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. தற்போதைய 3 கோயில்களையும் சோ்த்து மொத்தம் 5 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 754 கோயில்களில் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா், தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு,, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி. சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ. குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

SCROLL FOR NEXT