தமிழ்நாடு

உள்ளாட்சி தோ்தல்: இரண்டாவது நாளில் 4,597 போ் வேட்பு மனு தாக்கல்

DIN

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட இரண்டாவது நாளான வியாழக்கிழமை (செப்.16) 4597 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. இதையடுத்து 9 மாவட்டங்களில் முதல் நாளான புதன்கிழமை மொத்தம் 378 போ் மட்டுமே தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.

இந்நிலையில் இரண்டாவது நாளான வியாழக்கிழமை கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 3489 பேரும், கிராம ஊராட்சி தலைவா் பதவிக்கு 1066 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 41 பேரும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஒருவரும் என மொத்தம் 4,597 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.

இதன் மூலம் இரண்டு நாள்களில் மொத்தம் 4,975 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT