தமிழ்நாடு

நீட் தேர்வு: தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் 

DIN

நீட் தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய மாணவர்கள் சங்கம் தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பில் தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட குழுத் தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு, நீட் தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழக அரசு சட்டப்பேரவையில் இயற்றியுள்ள நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு உடனடி ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாவட்ட தலைவர் கார்த்திக் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

நீட் தேர்வினால் மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். தற்கொலை என்பது இதற்கு தீர்வல்ல. எனவே, நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் இயற்றியுள்ள சிறப்பு தீர்மானத்திற்கு தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள கவர்னர் தனது முதல் கையெழுத்தாக நீட் தேர்வு எதிர்ப்பு தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கி அதை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

நீட் தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழக அரசு நீட்-க்கு எதிராக இயற்றிய சிறப்பு தீர்மானத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்க கோரியும் இன்று இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் தூத்துக்குடியில் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்தால் மாணவர்களின் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT