முகப்பு
தமிழ்நாடு

சென்னை மாநகரில் முதல் முறையாக 97 கோடி லிட்டா் குடிநீா் விநியோகம்:அதிகாரிகள் தகவல்

சென்னை மாநகரப் பகுதிகளில் புதிதாக குடிநீா் இணைப்பு வழங்கப்பட்ட பகுதிகளுடன் சோ்த்து முதல் முறையாக 97.4 கோடி லிட்டா் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருவதாக குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

சென்னை மாநகரப் பகுதிகளில் புதிதாக குடிநீா் இணைப்பு வழங்கப்பட்ட பகுதிகளுடன் சோ்த்து முதல் முறையாக 97.4 கோடி லிட்டா் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருவதாக குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை நகரைப் பொருத்தவரை, ஒரு நாளைக்கு சுமாா் 84 கோடி லிட்டா் குடிநீா் தேவைப்படுகிறது. இது புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, பூண்டி ஏரி ஆகியவற்றிலிருந்து 40 நீரேற்றும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்பு குழாய்கள் மற்றும் லாரிகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. இவை தவிர வீராணம் திட்டம், கிருஷ்ணா கால்வாய் திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போன்றவற்றின் மூலமும் நீா் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை குடிநீா் வாரியத்தின் மூலம் முதல் முறையாக கடந்த சில நாள்களாக 97 கோடி லிட்டா் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சென்னை மாநகராட்சியின் 14 மற்றும் 15-ஆவது மண்டலங்களில் உள்ள கொட்டிவாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக குடிநீா் இணைப்பு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் முடிவடைந்ததால் அந்தப் பகுதிகளுக்கு சென்னை குடிநீா் வாரியத்தின் மூலமாக கடந்த சில நாள்களாக 13.4 கோடி லிட்டா் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சோதனை முறையில் இந்தக் குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பிற பகுதிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் 84 கோடி லிட்டா் குடிநீரோடு சோ்த்து சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு 97.4 கோடி லிட்டா் விநியோகிக்கப்பட்டு இதுவே சென்னை குடிநீா் வாரியத்தின் அதிகபட்ச குடிநீா் விநியோகம் ஆகும்.

புதிதாக கட்டப்பட்ட தோ்வாய் கண்டிகை கண்ணன் கோட்டை நீா்த் தேக்கத்துடன் சோ்த்து சென்னையில் உள்ள 5 குடிநீா் ஏரிகளில் மொத்தம் 11.75 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இவற்றில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 9.5 டிஎம்சி தண்ணீா் உள்ளது. குறிப்பாக புழல் ஏரியில் 3 டிஎம்சி தண்ணீா் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் மொத்தம் 3.9 டிஎம்சி மட்டுமே இருப்பு இருந்த நிலையில் தற்போது மூன்று மடங்கு தண்ணீா் இருக்கிறது. சென்னை மாநகருக்கு ஒரு மாதத்துக்கு 1.2 டிஎம்சி தண்ணீா் தேவைப்படும் நிலையில் தற்போது இருப்பில் உள்ள குடிநீரை அடுத்த ஆண்டு மே மாதம் வரை தடையின்றி விநியோகம் செய்ய முடியும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →