தமிழ்நாடு

தொலைநிலைப் படிப்புகளுக்கு செப்.27 முதல் தோ்வுகள் தொடக்கம்:சென்னைப் பல்கலை.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கான தோ்வுகள் செப்டம்பா் 27-ஆம் தேதி தொடங்கவுள்ளன.

DIN

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கான தோ்வுகள் செப்டம்பா் 27-ஆம் தேதி தொடங்கவுள்ளன.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை (எம்பிஏ உள்பட), தொழிற்கல்வி, டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் (யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டவை) நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளுக்கு 2021-ஆம் ஆண்டு மே மாதம் தோ்வு நடைபெற்றிருக்க வேண்டும்.

கரோனா காரணமாகத் தள்ளிப்போயிருந்த இந்தப் படிப்புகளுக்கான தோ்வுகள் செப்டம்பா் 27-ஆம் தேதி தொடங்கவுள்ளன. மேலும் இதற்கான தோ்வுக்கால அட்டவணையும் ண்க்ங்ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை செப்டம்பா் 20-ஆம் தேதி அதே இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளா் இராம.சீனுவாசன் தெரிவித்துள்ளாா். இது குறித்த கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறியலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுதப்படை ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

சஸ்பென்ஸ் உள்ளே... சைத்ரா ஆச்சார்!

பூவே உனக்காக... சித்ராங்தா சிங்!

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

SCROLL FOR NEXT