மத்திய அமைச்சருடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சந்திப்பு
மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று தில்லியில் நேரில் சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாடுமத்திய அமைச்சருடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சந்திப்பு
மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று தில்லியில் நேரில் சந்தித்துப் பேசினார்.
மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று தில்லியில் நேரில் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்திற்கு வர வேண்டிய உணவு மானிய நிலுவைத்தொகை மற்றும் உணவுத்துறை குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று தில்லி உத்யோக்பவானில் மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் நலம், உணவு மற்றும் பொதுவிநியோகத் திட்ட அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்துப் பேசினார். கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையையும் அவர் மத்திய அமைச்சரிடம் அளித்தார்.
இச்சந்திப்பின்போது தமிழக அரசின் புதுதில்லிக்கான சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், திண்டுக்கல் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் வேலுசாமி, தமிழ்நாடுஅரசின் கூட்டுறவு, உணவு (ம)நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின் இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குனர் வி.ராஜாராமன்.இ.ஆ.ப., தமிழ்நாடு அரசின் முதன்மை உள்ளுறை ஆணையாளர் அஷிஷ்சாட்டர்ஜி.இ.ஆ.ப., ஆகியோரும் உடனிருந்தனர்.