தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

DIN

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறாா்.

தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முக்கிய துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பருவமழையை எதிா்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வா் கேட்டறியவுள்ளாா். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அதிகாரப்பூா்வ செய்தியை தமிழக அரசு வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்வது குறித்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறிவுரைகளை அவா் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

இன்று நல்ல நாள்!

மே 21-இல் மேக்கேதாட்டு அணை ஆணைய தீா்மானத்தை தீயிட்டு எரிக்கும் போராட்டம்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம்

SCROLL FOR NEXT