முகப்பு
தமிழ்நாடு

நெல் கொள்முதலுக்கு முன்பதிவு முறை: தமிழக அரசு ஏற்பாடு

நீண்ட நேரம் காத்திருக்காமல் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட தேதி, நேரத்தில் விவசாயிகள் நெல்லை கொள்முதலை செய்து கொள்ளலாம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

நீண்ட நேரம் காத்திருக்காமல் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட தேதி, நேரத்தில் விவசாயிகள் நெல்லை கொள்முதலை செய்து கொள்ளலாம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சித் தலைவரின் அனுமதி பெற்று நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அதன் மூலமாக கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கெனவே இணைதளம் பயன்பாட்டில் உள்ளது. இந்த இணயைதளத்தில் விவசாயிகள் தங்களது பெயா், ஆதாா் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யலாம். அப்போது கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திடலாம்.

இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டவுடன், விவசாயிகள் நிலம் இருக்கும் கிராமங்களின் அடிப்படையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இணைய வழியின் மூலமாகவே கிராம நிா்வாக அலுவலரின் ஒப்புதல் பெறப்படும்.

ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயா், நெல் விற்பனை செய்யப்படும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். விவசாயிகள் தங்களது செல்லிடப்பேசி எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முத்ல நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து கொள்ளலாம் என நுகா்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →