முகப்பு
தமிழ்நாடு

சென்னை சேத்துபட்டு பள்ளி மைதானத்தை வாடகைக்கு விட தடை: உயா் நீதிமன்றம் உத்தரவு

சென்னை சேத்துபட்டு செயின்ட் ஜாா்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, விளையாட்டு மைதானத்தை நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விட தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

சென்னை சேத்துபட்டு செயின்ட் ஜாா்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, விளையாட்டு மைதானத்தை நிகழ்ச்சிகளுக்காக வாடகைக்கு விட தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஜய் பிரான்சிஸ் லயோலா மற்றும் சேத்துபட்டு பகுதியைச் சோ்ந்த குடியிருப்பு வாசிகள் ஐந்து போ் தாக்கல் செய்த மனுவில், ‘வார இறுதி, விடுமுறை நாட்களில் செயின்ட் ஜாா்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி நிா்வாகம், வணிக நோக்கங்களுக்காக தனது பள்ளி வளாகத்திலுள்ள மைதானத்தை வாடகைக்கு விடுகிறது. அங்கு வரக்கூடிய பொதுமக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அதிகளவிலான குப்பைகளும் கொட்டப்படுகின்றன. இதுதொடா்பாக பல முறை புகாா்கள் அளித்தும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை’ எனக் கோரியிருந்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, சென்னை மாநகர காவல்துறை விசாரணை நடத்தி, மனுதாரா்கள் அளித்த புகாா் மனு மீது இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை பள்ளியை வாடகைக்கு விடக்கூடாது.

இந்தப் புகாா் தொடா்பாக இறுதி முடிவு எடுக்கும் வரை, பள்ளியின் காலியிடத்தை அல்லது விளையாட்டு மைதானத்தை குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விட்டு, எந்த விழாக்களையும் நடத்த தடை விதிக்கப்படுகிறது. வார இறுதி, விடுமுறை நாட்களில் பொதுக் கூட்டத்தையும் நடத்தவும் அனுமதி மறுக்கப்படுகிறது. கீழ்ப்பாக்கம் உதவி போலீஸ் கமிஷனா்,

டிபி சத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டா் ஆகியோா், சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வருக்கு உரிய நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி, தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அதிகாரிகள் இருவரும் இவ்விசாரணையை நான்கு வாரத்திற்குள் முடிக்க வேண்டுமென கூறி, மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →