முகப்பு
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ‌. 39.95 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ‌. 39.95 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
கோப்புப்படம்.
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் ரூ‌. 39.95 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

உளவுத்துறையின் ரகசியத் தகவலைத்தொடர்ந்து ஃப்ளை துபை எஃப்இசட்-447 விமானத்தில் துபையிலிருந்து சென்னை வந்த 41 வயதான ஆண் பயணி ஒருவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

அவரை சோதனை செய்தபோது, 940 கிராம் எடையிலான தங்கம் அவரது உடலில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ. 39.95 லட்சம் மதிப்பிலான 864 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →