முகப்பு
தமிழ்நாடு

புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்கைக்கு அனுமதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:15 AM
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பகிர்:

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது,

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளில் 1650 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை புதிய மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 இடங்களுக்கு உடனடியாக மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

அதேபோல் திருவள்ளூர், ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல் மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 800 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →