களியக்காவிளை காவல்துறை சோதனை சாவடியில் சோதனை மேற்கொண்ட ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார். 
தமிழ்நாடு

களியக்காவிளை காவல்துறை சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை: கணக்கில் வராத ரூ.14,600 பறிமுதல்

களியக்காவிளை காவல்துறை சோதனை சாவடியில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.14,600 பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

களியக்காவிளை: களியக்காவிளை காவல்துறை சோதனை சாவடியில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.14,600 பறிமுதல் செய்யப்பட்டது.

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு செல்லும் சரக்கு வாகனங்களில் இருந்து லஞ்சம் வாங்குவதாகவும், வெளிமாவட்டங்களில் இருந்து குமரி வழியாக கேரளத்துக்கு கனிம வளம் கட்டத்தப்படுவதாகவும் புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.  தொடர் புகாரில் கிடைத்த தகவலின் பேரில் நாகர்கோவில் ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில், அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.14,600 பறிமுதல் செய்யப்பட்டது. 

இது தொடர்பாக பணியில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் செய்யது ஹுசைன்,  சிறப்பு உதவி ஆய்வாளர் முத்து,  தலைமை காவலர் அசோக்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT