முகப்பு
தமிழ்நாடு

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு: ஆக.25-ல் தீர்ப்பு

மருத்துவப் படிப்புகளில் 50 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான அவமதிப்பு வழக்கில் ஆகஸ்ட் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
உயர்நீதிமன்றம்
பகிர்:

மருத்துவ படிப்புகளில் 50 சதவிகித இடஒதுக்கீடு தொர்டபான அவமதிப்பு வழக்கில் ஆகஸ்ட் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கோரியது தொடா்பாக திமுக தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கோரப்பட்ட நிலையில், இன்று விளக்கமளித்துள்ள மத்திய அரசு, பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான ஒதுக்கீட்டால் ஓபிசி பிரிவுக்கு பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இந்த வழக்கில் ஆகஸ்ட் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →