முகப்பு
தமிழ்நாடு

வழிநெடுக ஆம்புலன்ஸ்கள் மீது மலர் தூவி மக்கள் அஞ்சலி

குன்னூரில் இருந்து சூலூர் விமானப்படை தளம் வரும் வரையிலும் வழிநெடுக மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேரின் உடல்கள், 13 ஆம்புலன்ஸ்கள் மூலமாக குன்னூரில் இருந்து சாலை வழியாக கோவை சூலூர் விமானப் படைத்தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. 

அப்போது, பிற்பகல் 1.40 மணிக்கு, ஆம்புலனஸ்கள் மேட்டுப்பாளையத்தை வந்தடைந்தன. அப்போது, அங்கு சாலையின் இருபுறங்களிலும் வரிசையாக நின்றிருந்த ஏராளமான மக்கள், ஆம்புலன்ஸ்கள் மீது பூக்களைத் தூவி, வீர வணக்கம்.... வீர வணக்கம்....பாரத் மாதாகி ஜே.. வந்தே மாதரம் என  கோஷமிட்டு உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

குன்னூரில் இருந்து சூலூர் விமானப்படை தளம் வரும் வரையிலும் வழிநெடுக மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

முழு கட்டுரையைப் படிக்க →