சென்னையில் சுழற்சி முறையில் கரோனா பரிசோதனை
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதிகளில் சுழற்சி முறையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதிகளில் சுழற்சி முறையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்கெட் பகுதிகளில் சுழற்சி முறையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கோவிட் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அதிக பரிசோதனைகள் மேற்கொண்டு தொற்று பாதித்த நபர்களை கண்டறிந்து அவர்களை தனிமைபடுத்துதல் அல்லது மருத்துவமணைகளில் அனுமதிப்பதன் மூலம் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நாள்தோறும் சராசரியாக 25,000 முதல் 30,000 வரை ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிக்கலாமே 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தற்பொழுது சென்னையில் கொரோனா தொற்று பரவுதலை தடுக்க மாநகராட்சின் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், உதராணமாக மார்கெட், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அரசு அறிவித்துள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு இயங்கும் இதர அங்காடிகள் ஆகிய இடங்களில் பணிபுரியும் நபர்களுக்கு சுழற்சி முறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுவரை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மே மாதம் 7ம் தேதி முதல் 30.07.2021 வரை 23,86,986 ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்த மேற்குறிப்பிட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளுக்கு மக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.