தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 990 பேருக்கு கரோனா; 20 பேர் பலி

DIN


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 990   பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 20 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று 1,009 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 990 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் நீண்ட நாள்களுக்கு பிறகு ஆயிரத்திற்கு கீழ் கரோனா தொற்று குறைந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன் கிழமை (நவ.1) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 புதிதாக 990 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 27,03,613-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து 1,153 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,56,168-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 11,309 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,19,769 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் புதிய விரைவு ரயில்: ஜூலை 19-ல் தொடக்கம்!

தமிழகத்தில் இயல்பைவிட 88% கூடுதல் மழைப்பொழிவு: வானிலை ஆய்வு மையம்

பொறியியல் கல்லூரிகளில் கணினி படிப்புகளுக்கு கூடுதலாக 22,000 இடங்கள்!

சிந்தியன் ரன்வீர் சிங்...!

இந்தியா கொண்டு வரப்படும் சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நக ஆயுதம்!

SCROLL FOR NEXT