முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,027 கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 21,027 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக 119 அடியாக நீடித்து வருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:32 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக நீடித்து வருகிறது. 
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 21,027 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக 119 அடியாக நீடித்து வருகிறது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும்மழை குறைந்ததன் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 26,440 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, புதன்கிழமை காலை வினாடிக்கு 21,027 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் 20,000  கன அடியாக உள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 91.88 டி.எம்.சி. ஆக உள்ளது. 

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுவதால் புதன்கிழமை இரண்டாவது நாளாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக நீடித்து வருகிறது. 

அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டால் மேட்டூர் அணை 120 அடியாக உயரும் வாய்ப்பு உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →