கோவையில் குறையாத கரோனா: பாதிப்பில் முதலிடம்
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் கோவை முதலிடத்தில் உள்ளது. கோவையில் இன்று ஒரு நாளில் மட்டும் 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் கோவை முதலிடத்தில் உள்ளது. கோவையில் இன்று ஒரு நாளில் மட்டும் 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக சென்னையில் 169 பேருக்கும், செங்கல்பட்டில் 110 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் புதிதாக 169 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக 5,45,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் 3 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 8,413 பேர் உயிரிழந்தனர். பல்வேரு மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் 1,772 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை, சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 110 பேரும், தென்காசியில் 104 பேரும், ஈரோட்டில் 96 பேரும், தஞ்சாவூரில் 91 பேரும், திருப்பூரில் 71 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.