முகப்பு
தமிழ்நாடு

திருமண விழாவில் சோகம்; மின்சாரம் தாக்கி சமையற்கலைஞர் மரணம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண விழாவுக்கு பூதலூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (29) என்பவர் சமையல் பணிக்கு வந்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண விழாவுக்கு பூதலூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (29) என்பவர் சமையல் பணிக்கு வந்துள்ளார்.

வியாழக்கிழமை காலை உணவுக்குப் பிறகு மின்விசிறியைப் போடுவதற்காக சென்ற அவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதையடுத்து அந்த இடத்திலேயே தர்மராஜ் உயிரிழந்தார். உடற்கூராய்வுக்காக அவரது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கீரனூர் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →