தமிழ்நாடு

நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

DIN

தில்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசிவருகிறார். 

தமிழகத்தின் நிதி சார்ந்த பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நிர்மலா சீதாராமனுடன் ஆலோசிக்கவுள்ளார். மேலும், ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையினை உரியகாலத்தில் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கவுள்ளார்.

தில்லியில் மூன்று நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். மத்திய அமைச்சர்களை சந்தித்த நிலையில், இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் உடன் பங்கேற்றுள்ளார். 

இந்த சந்திப்பில், தமிழகத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவிப்பது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.

மேலும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கடன் உதவியை உடனடியாக வழங்க வேண்டும், கட்டமைப்புக்கான நிதி உதவி, மழைநீர் வடிகாலுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து வரவேண்டிய நிதி போன்றவை குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT