தமிழ்நாடு

போலீசாரை மிரட்டியதாக திமுக கவுன்சிலரின் கணவர் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்

சென்னையில் ரோந்து பணியிலிருந்த போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டிய விவகாரத்தில் திமுக கவுன்சிலரின் கணவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித

DIN

சென்னையில் ரோந்து பணியிலிருந்த போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டிய விவகாரத்தில் திமுக கவுன்சிலரின் கணவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

சென்னை மாநகராட்சி 51 ஆவது வார்டு திமுக உறுப்பினர் நிரஞ்சனா. இவரது கணவர் ஜெகதீசன். இவர் சென்னையில் ரோந்து பணியிலிருந்த போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது. 

இதையடுத்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில், திமுக கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் உள்பட 5 பேர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது, மிரட்டல் விடுப்பது, பொது இடங்களில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியது உள்ளிட்ட பி​ரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இதில் மூன்று பேர் வழக்குரைஞர்கள். 

இந்நிலையில், ரோந்து பணியிலிருந்த போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டிய விவகாரத்தில் திமுக கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் கனமழை நீடிக்கும்!

அனல் மின்ஊழியா்களுக்கு மாதம் இரு சனிக்கிழமைகள் விடுமுறை: மின்வாரியம் உத்தரவு!

சிம்ம ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

சமயபுரம் கோயிலில் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணி தொடக்கம்

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு ரூ. 1. 20 லட்சம் மதிப்பில் பொருட்கள் வழங்கல்

SCROLL FOR NEXT