தமிழ்நாடு

நூல் விலை உயர்வு நீடித்தால் ஜவுளித்துறை முடங்கிவிடும்: விஜயகாந்த்

DIN

நூல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என்றும் இதேநிலை நீடித்தால் தமிழகத்தில் ஒட்டுமொத்த ஜவுளித்துறை முடங்கி விடும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். 

பின்னலாடை உற்பத்தில் இந்தியாவின் மிகப்பெரும் மையமாகவும் சர்வதேச முக்கியத்துவம் பெற்ற நகரமாகவும் இருக்கும் திருப்பூரில்தான் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 70 விழுக்காட்டிற்கும் அதிகமாக தயாராகின்றன. 

இந்நிலையில் பின்னலாடைகளின் முக்கிய மூலப் பொருளான நூலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு ₹.230-க்கு விற்பனையான நூல் விலை கடந்த ஓராண்டில் மட்டும் ₹.160 வரை உயர்ந்துள்ளது. ஏழை நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் அனைத்து விலைவாசிகளின் உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேலும் இதே நிலை நீடித்தால் ஒட்டுமொத்த ஜவுளித்துறை முடங்கி விடும். 

இதுதவிர பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, எண்ணெய் என அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டிய மத்திய, மாநில அரசுகள், அதனை மக்கள் மீது திணிப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

SCROLL FOR NEXT