தமிழ்நாடு

12ஆம் வகுப்பு: புதிய வினாத்தாளில் நாளை தேர்வு

12ஆம் வகுப்பு கணிதப் பாட வினாத்தாள் கசிந்துள்ள நிலையில், புதிய வினாத்தாளை வைத்து நாளை தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

DIN

12ஆம் வகுப்பு கணிதப் பாட வினாத்தாள் கசிந்துள்ள நிலையில், புதிய வினாத்தாளை வைத்து நாளை தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கான இரண்டாவது திருப்புதல் தோ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நாளை நடைபெற இருந்த 12 ஆம் வகுப்புக்கான கணிதத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது. 

இதனால் நாளை கணிதத் தேர்வு நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் புதிய வினாத்தாளை வைத்து 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வு நாளை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

திருப்புதல் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் இறுதித் தேர்வில் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 3 போ் கைது

SCROLL FOR NEXT