தமிழ்நாடு

சீமை கருவேலம்: தமிழக அரசுக்கு 2 மாதங்கள் அவகாசம்

DIN

தமிழகத்தில் சீமைக்கருவேலம் மரங்களை அகற்றுதல் குறித்து இறுதி கொள்கை முடிவை அறிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் 2 மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ளது. 

தமிழகத்தில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொது செயலாளா் வைகோ உள்ளிட்டோா் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயா் நீதிமன்றம், சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் இறுதி கொள்கை முடிவை அறிவிக்க தமிழக அரசுக்கு 2 மாதங்கள் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு அவகாசம் கேட்ட நிலையில் 2 மாதங்கள் அளித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இதையடுத்து இவ்வழக்குகளை ஜூன் முதல் வாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT