தமிழ்நாடு

மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை வழங்கவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

DIN

தமிழகத்தில் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கவில்லை என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தமிழகத்தின் மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில் மத்திய அரசு 48 ஆயிரம் முதல் 50 டன் நிலக்கரி மட்டுமே வழங்குகிறது.

இந்த ஆண்டில் தமிழகத்துக்குத் தேவையான 17,300 மெகா வாட் மின்சாரம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை. 

நிலக்கரி பற்றாக்குறையை போக்குவதற்காக முதல்வரின் வழிகாட்டுதலின் படி 4.8 ளாஸா டன் இறக்குமதி செய்வதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளன. 

இந்த ஆண்டு வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டாலும், அடுத்த ஆண்டு மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவில் மின்சார உற்பத்தி அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் டிரெய்லர்

கால் முளைத்த ஓவியம்! காஜல் அகர்வால்..

அழகென்றால் அவள்! பிரீத்தி அஸ்ரானி..

நாகை - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

சிக்கிமில் மின்சார விநியோகத்தை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

SCROLL FOR NEXT