பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள தமிழர்களும் பாதிக்கப்படுவதால் தமிழகத்திலிருந்து அரிசி, பருப்பு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களை அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் பொருள்களை விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் ஜெய்சங்கரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.