தமிழ்நாடு

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் முக்கிய அறிவிப்புகள்

DIN

தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் அர. சக்கரபாணி தாக்கல் செய்தார்.

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்..

1. மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் / எடையாளர்களைத் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும்.

2. அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும்.

3. பொதுவிநியோக திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள் (கேழ்வரகு) வழங்கப்படும்.
4. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் முழுமையாக கணினிமயமாக்கப்படும்.
5. கான்கிரீட் தரை மற்றும் மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள் மொத்தம் ரூ.70.75 கோடியில் நபார்டு நிதி உதவியுடன் அமைக்கப்படும்.

6. குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு தனித்து இயங்கும் கண்காணப்பு கேமராக்கள் வழங்கப்படும்.

7. தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் நடைமுறைகள் கணினிமயமாக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகிழக்கு மாநிலங்களில் நிலவரம் என்ன?

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் முதன்முதலாக 10% வாக்கு பெற்ற பாஜக

ஜார்க்கண்ட்: முன்னிலையில் அன்னபூர்ணா தேவி!

கேரளம்: 20-ல் 13 இடங்களில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை!

பிரியங்கா காந்தி இல்லத்தில் சோனியா காந்தி!

SCROLL FOR NEXT