தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: பிணை வழங்க சிபிஐ எதிர்ப்பு

DIN

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிறையில் உள்ள சார்பு-ஆய்வாளருக்குப் பிணை வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் சாா்பு - ஆய்வாளா் ரகு கணேஷ், முன்னதாக தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், தந்தை, மகன் கொலை வழக்கில் நான் உள்பட 9 போ் மதுரை மத்தியச் சிறையில் உள்ளோம்.

இதுவரை 105 சாட்சிகளில், 22 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளனா். நான் 20 மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ளேன். விசாரணை முடியும் வரை காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம் சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியுள்ளனர் என்றும் காவல்துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மக்களைக் காப்பதற்குத் தான் என்றும் வாதாடிய சிபிஐ தரப்பு,  சாா்பு - ஆய்வாளா் ரகு கணேஷ்க்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

SCROLL FOR NEXT