தமிழ்நாடு

விருதுநகர் பாலியல் வன்கொடுமை: 4 சிறுவர்களுக்கு ஜாமீன்

DIN

விருதுநகர்: விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 சிறுவர்களுக்கு சிறார் நீதி குழும நீதிபதி மருதுபாண்டியன் ஜாமீன் வழங்கி உத்திரவிட்டுள்ளார்.

விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர்  என மொத்தம் 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு  சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி எஸ்பி முத்தரசி தலைமையில் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 8 நபர்கள் வீடுகளிலும் சிபிசிஐடி காவலர்கள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

நால்வரையும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT