திருமங்கலம் அரசு மருத்துவமனையில் ரூ.20 லட்சம் மதிப்பில் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவையை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம். 
தமிழ்நாடு

ஒமைக்ரானின் எக்ஸ்இ கரோனா குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை: அமைச்சர் சுப்பிரமணியம் பேட்டி

ஒமைக்ரானின் துணை வகையான எக்ஸ்இ கரோனா குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

DIN

ஒமைக்ரானின் துணை வகையான எக்ஸ்இ கரோனா குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விபத்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் .

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: புதிதாக பரவிவரும் ஒமைக்ரானின் எக்ஸ்இ கரோனா குறித்து மக்கள் பீதி அடைய தேவையில்லை. புதிய வைரஸ் தொற்று இந்தியா அளவில் இன்னும் கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து ரூ.20 லட்சம் மதிப்பில் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன்,திருமங்கலம் அரசு தலைமை மருத்துவர் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT