முகப்பு
தமிழ்நாடு

நுழைவுத் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு அதிமுக அதரவு

நுழைவுத் தேர்வுகளுக்கு எதிராக தமிழக பேரவையில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவிப்பதாக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:56 AM
முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
பகிர்:

நுழைவுத் தேர்வுகளுக்கு எதிராக தமிழக பேரவையில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவிப்பதாக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வினை நடத்துவதற்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை முன்மொழிந்தார்.

இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகின்றது. மதிமுக, பாமக, காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். 

தொடர்ந்து அதிமுக எம்.பி.ஏ. கே.பி.அன்பழகன் பேசுகையில், “மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் அனைத்து பல்கலைக்கழங்களிலும் நுழைவுத் தேர்வு என்ற கட்டாயம் உருவாகிவிடும். இந்த நுழைவுத் தேர்வை திரும்பப் பெற தேவையான ஆக்கப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →