முகப்பு
தமிழ்நாடு

தங்கம் ஒரு சவரன் ரூ.39,400-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை ஒரு சவரன் ரூ.39,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:56 AM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை ஒரு சவரன் ரூ.39,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, தங்கம் விலை பிப்ரவரி மாதத்தில் இருந்து படிப்படியாக உயரத்தொடங்கியது. குறிப்பாக, பிப்ரவரி 22-ஆம் தேதி ரூ.38-ஆயிரத்தையும், பிப்ரவரி 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், மாா்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை, ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. 

இதன் தொடா்ச்சியாக, ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.6 உயா்ந்து, ரூ.39,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.48 உயா்ந்து, ரூ.4,925க்கு விற்பனையாகிறது.

அதேநேரத்தில், வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.70 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.200 உயர்ந்து ரூ.71,700 ஆகவும் உள்ளது. 

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,925

1 சவரன் தங்கம்............................... 39,400

1 கிராம் வெள்ளி............................. 71.70

1 கிலோ வெள்ளி.............................71,700

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 4,919

1 சவரன் தங்கம்............................... 39,352

1 கிராம் வெள்ளி............................. 71.50

1 கிலோ வெள்ளி.............................71,500
 

முழு கட்டுரையைப் படிக்க →