தென் தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில்,
கேரள கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,
13.04.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கன மழையும், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
14.04.22: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகம், நீலகிரி, கோயம்பத்தூர், மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
15.04.22: தென்தமிழகம், நீலகிரி, கோயம்பத்தூர், மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16.04.22, 17.04.22: தென்தமிழகம், நீலகிரி, கோயம்பத்தூர், மற்றும் திருப்பூர் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துமன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு
தாராபுரம் 15, ஆய்க்குடி, சங்கரன் கோவில் 11, தென்காசி 10, சிவகிரி 8, பாம்பன் 7, நாங்குநேரி 6, திருவாரூர், சோழவந்தான், பெருஞ்சாணி அணை, ராதாபரம், உசிலம்பட்டி, தக்கலை தலா 5, முத்துப்பேட்டை, வைகை அணை, வாடிப்பட்டி, சூரலக்கோடு, வைகை அணை, நத்தம், செங்கோட்டை தலா 4, மதுரை தெற்கு, மதுக்கூர், கொடவாசல், ஸ்ரீமுஷ்ணம், அதிராம்பட்டினம், தஞ்சாவூர் 3, கொடைக்கானல், மாயனூர், ராஜபாளையம், தேக்கடி, கொளச்சல், கிருஷ்ராயபுரம், சாத்தூர், பீளமேடு தலா 2, கோத்தகிரி, ஏற்காடு, சூலூர், பண்ருட்டி தலா 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
13.04.22, 14.04.22: தென்தமிழக, கேரளா கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.