முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது!

விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
கோப்புப்படம்
பகிர்:

விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடா்பாக அவரது காதலன் ஹரிஹரன், சுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 சிறுவா்கள் கைது செய்யப்பட்டனா். 

முதற்கட்டமாக இவ்வழக்கில் கைதான 8 போ் மீதும் 6 பிரிவுகளில் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் முத்தரசி தலைமையிலான போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஹரிஹரன், சுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய நால்வர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

இந்த வழக்கில் கைதான பள்ளி மாணவா்கள் 4 போ் ராமநாதபுரத்தில் உள்ள சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.