சென்னை திருமுல்லைவாயில் குடியிருப்புப் பகுதியில் நரிக்குறவர் இன மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை திருமுல்லைவாயில் நரிக்குறவர் காலனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்குள்ள நரிக்குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, முதியோர் உதவித் தொகை, கடனுதவி ஆகியவற்றை வழங்கினார். 63 பயனாளிகளுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பின்னர் காலனியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர்க் குழாயை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அங்குள்ள மக்களிடம் உரையாடினார். பலர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிக்க | நரிக்குறவ மாணவி வீட்டில் உணவருந்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.