தமிழ்நாடு

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

DIN

செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தை ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் சித்திரைப் பெருவிழா பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் பெருமாளுக்கு 365 நாட்களும் திருமணம் நடைபெறுவதாக ஐதீகம் உள்ளது. அதனால் இந்த ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் கோயில் பரிகார ஸ்தலமாக விளங்குவதால் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருமணத் தடை நீக்கும் நித்ய கல்யாண பெருமாளுக்கு இரண்டு மாலைகள் வாங்கி வந்து அணிவித்து லட்சுமி நித்ய கல்யாண பெருமாளுக்கு அணிவித்து ஒரு மாலையை பரிகாரம் செய்யும் பக்தருக்கு அளிப்பார்கள். 

அந்த மாலையை திருமணம் ஆகாத பெண்களும் ஆண்களும் அணிந்து கோயிலை வலம் வந்து அந்த மாலையை வீட்டில் வைப்பார்கள். திருமணமானவுடன் தம்பதியராக வந்து அவர்கள் அந்த மாலையை கோயிலில் வைத்து வேண்டுதல் பரிகாரத்தையும் செய்து பெருமாளை வழிபடுவதால் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இக்கோயிலுக்கு திருமணத் தடை நீக்கப் பரிகாரம் செய்வதற்காக வந்துசெல்லும் புகழ்பெற்ற கோயிலாக விளங்கும். 

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 25 ஆம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் சிறப்புப் பூஜைகளும் சனிக்கிழமை துவாஜரோகணம் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தையொட்டி  பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தில் எழுந்தருளக் கொடிமரம் பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து  தோளுக்கு இனியாள் பகல் உற்சவமும் திருவீதி உலா நடைபெற்றது. இரவு அன்ன வாகன உற்சவம் திருமஞ்சனம் சுவாமி வீதி உலாவும், 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெட்டிவேர்  சப்பரம் உற்சாகமும் காலை சூரிய பிரபை உற்சவமும் இரவு சிறிய திருவடி சேவையும், 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சேஷ வாகன சேவை உற்சவமும், புன்னையடி சேவை உற்சவம் இரவும், 20 ஆம் தேதி புதன்கிழமை பகல் உற்சவமாக பல்லக்கு நாச்சியார் திருக்கோலம் உற்சவமும், இரவு கருட சேவை உற்சவமும், 21ஆம் தேதி வியாழக்கிழமை பகல் சூரிய பிரபை உற்சவமும் இரவு யானை வாகனம் சேவையும், 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை திருத்தேர் உற்சவமும், இரவு தோலுக்கு இனியாள் உற்சவமும், 23ஆம் தேதி சனிக்கிழமை பல்லக்கு வெண்ணைத்தாழி கண்ணன் சேவை உற்சவமும், இரவு குதிரை வாகன சேவையும், 24 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பல்லக்கு சேவை உற்சவமும் இரவு சந்திரப் பிரபை உற்சவமும், 25 ஆம் தேதி திங்கள்கிழமை புஷ்பயாகம்,துவாதச ஆராதனையும் இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. 

விழா நாட்களில் காலை இரவு இருவேளையும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் ஆ. குமரன் திருக்கோயில் பணியாளர்கள், தக்கார் மற்றும் உதவி ஆணையர் முத்து ரத்தினவேல், திருவிழா உபயதாரர்கள், திருவிடந்தை தெற்கு பட்டுச் செய்து வருகின்றனர். கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT