தடுப்பணைக்கு தடை கோரிய மனு:தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
ஈரோடு மாவட்டம் குரங்கன்பாளையம் ஓடையில் தடுப்பணை கட்ட தடை கோரிய மனுவுக்குப் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் குரங்கன்பாளையம் ஓடையில் தடுப்பணை கட்ட தடை கோரிய மனுவுக்குப் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நபாா்டு வங்கியின் கடன் உதவியுடன், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், ரூ.38 கோடியே 72 லட்சம் செலவில் 14 தடுப்பணைகள் கட்டுவது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, கொம்பனைபுதூரில் குரங்கன்பாளையம் ஓடையிலும் தடுப்பணை கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தடை கேட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில், தங்கவேலு என்பவா் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளாா்.
அதில், தடுப்பணை கட்ட உத்தேசித்த பகுதியை ஆய்வு செய்த தொழில்நுட்பக் குழு, ‘இந்த இடம் தடுப்பணை கட்ட உகந்தது அல்ல, மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும், அப்பகுதியில் உள்ள கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது எனக் கூறியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தாா்.
Advertisement
மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி. தமிழ்ச்செல்வி ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த மனுவுக்கு 4 வாரங்களில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனா்.