தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 104.99 அடியாக உயர்வு

DIN

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 104.99 அடியாக உயர்ந்துள்ளது. 

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று புதனிகிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3610 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் நேற்று காலை 104.88 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்  இன்று காலை 104.99 அடியாக உயர்ந்துள்ளது.

நீர் இருப்பு 71.45 டிஎம்சியாக  உள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு  2973 அடியிலிருந்து 3610 கன அடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT