தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதி கோரிய மனு தள்ளுபடி

DIN

சென்னை; சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்திருக்கும் கனகசபையில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து தமிழக அரசுதான் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக சிதம்பரம் நடராஜா் கோயிலில் கனகசபை மீது பக்தா்கள் ஏறி சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்யவும், தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்க வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், பக்தா்கள் சார்பில் தொழிலதிபா் எஸ்.ஆா்.ராமநாதன், டாக்டா் பிரசன்னா ராஜ்குமார், தமிழ்நாடு கைவினைஞா்கள் சங்கத் தலைவா் ஜி.சேகா், பி.அண்ணாமலை, கே.மணிரத்தினம் ஆகியோர் சார்பில் வழக்குரைஞா் ஹிமாவந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், இன்று மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வியாபாரியிடம் வழிப்பறி: இளைஞா் கைது

பழனி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா இன்று கொடியேற்றம்

செங்கல்பட்டு: இரு விபத்துகளில் 9 பேர் உயிரிழப்பு

பைக் மோதியதில் கடமான் பலி

சிவகங்கை நகராட்சி குப்பை லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT