தமிழ்நாடு

காவல்துறையில் 90 % ஊழல்வாதிகள்: தனிநீதிபதியின் கருத்து நீக்கம்

DIN

தமிழ்நாடு காவல்துறையில் 90 சதவீதம் போ் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவா்களாகவும் உள்ளனா் என்ற தனி நீதிபதியின் கருத்தை தீா்ப்பில் இருந்து நீக்கம் செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாமக்கல்லைச் சோ்ந்த வசந்தி என்பவா் தனது சொத்து மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்ட தனி நீதிபதியின் இந்த கருத்தை நீக்குமாறு, தமிழக டிஜிபி சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த வழக்கில் மாநில தலைமை குற்றவியல் அரசு வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, உயிரைப் பணயம் வைத்து பணிபுரிந்து வரும் போலீஸ் அதிகாரிகளுக்கு இதுபோன்ற உத்தரவு மிகுந்த வருத்தத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது எனவும், இதுபோல வழக்குக்கு சம்பந்தமில்லாத கருத்துகளை நீதிபதிகள் தெரிவிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை சுட்டிக் காட்டினாா்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோா், அந்த உத்தரவில் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான கருத்துகளை மட்டும் நீக்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT