முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம்  105.10 அடியாக உயர்வு

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Updated On : 21 ஏப்ரல், 2022 at 9:00 AM
மேட்டூர் அணை
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:32 PM

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 105.10 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று வியாழக்கிழமை காலை வினாடிக்கு 3609 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் நேற்று காலை 104.99 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று வியாழக்கிழமை காலை  105.10 அடியாக உயர்ந்துள்ளது .

Advertisement

நீர் இருப்பு 71.60 டிஎம்சியாக  உள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு 3609 கன அடியாக  உள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.