மானாமதுரையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழையால் ராம்நகர் பகுதியில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. 
தமிழ்நாடு

மானாமதுரை பகுதியில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை: வீடுகளை சூழ்ந்த தண்ணீர்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் மழைத் தண்ணீர் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் வீடுகளை மழைத் தண்ணீர் சூழ்ந்தது. 

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் மழைத் தண்ணீர் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் வீடுகளை மழைத் தண்ணீர் சூழ்ந்தது. 

மானாமதுரை பகுதியில் கடந்த சில நாள்களாக வெயில் அடிப்பதும் அவ்வப்போது மழை பெய்வதுமாக காலநிலை மாறி மாறி இருந்து வந்தது. 

இந்த நிலையில், கடந்த 5 நாள்களாக மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் வெப்பம் தாங்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். மதியம் நேரங்களில் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இரவு நேரங்களில் வீடுகளில் மக்கள் தூக்கமின்றி புழுக்கத்தால் அவதிப்பட்டனர். 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு வானத்தை மழை மேகங்கள் சூழ்ந்து இடி இடிக்கத் தொடங்கியது. அதன்பின்னர் சாரலாக தூறத் தொடங்கிய மழை வலுவடைந்து பலத்த மழையாக மாறி கொட்டி தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை மழைத் தண்ணீர் சூழ்ந்து நின்றது. 

அதைத் தொடர்ந்து காலை 7 மணிக்கெல்லாம் வழக்கம்போல் கதிரவன் கண்ணைத் திறந்து பார்த்ததும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. அதிகாலைப் பொழுதில் பெய்த இந்த மழையால் நிலவிய குளிர்ச்சித்தன்மை வெயிலின் கொடுமையை அனுபவித்து வரும் மக்களுக்கு இதமாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உள்பட 3 போ் கைது

தில்லி, உ.பி.யில் போலீஸாா் அதிரடி சோதனை: ரூ.30 லட்சம் ஹெராயினுடன் 2 போ் கைது!

பீதம்புராவில் 3 மெட்ரோ நிலையங்களின் பெயா் மாற்றம்: தில்லி முதல்வா் அறிவிப்பு!

பட்டதாரி ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வு: மாவட்டத்தில் 9,176 போ் எழுதினா்

அரியலூரில் 97% எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்

SCROLL FOR NEXT